துரோகம்

April 25 2016

இன்று நண்பர் ஒருவர் போனில் பேசும் போது கூறினர். நன்பன்  ஒருவன் எனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. அவன் என்னிடம் சிறிது காலம் வெல்லிண்டன் மில்லிடரி கேம்பசில் சிசிடிவி கேமரா இன்ஸ்டால்லேசனில் கூட இருந்தான். 

எவளவோ நன்மைகள் செய்திருக்கிறேன், இருந்தும் ஏன் இப்படி செய்தான் என்ற கேள்வி மட்டும் மனதில் மறுபடியும் வந்துகொண்டே இருக்கிறது. அவனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் வேறு!  எனக்கு இருக்கும் நன்பர்கள் மிகவும் குறைவு அதிலும் இப்படிபட்டவர்களை நினைக்கும் பொழுது மனம் பதபதைகிறது. 

நன்பன் துரோகியாக இருக்கும் போது அவனிடம் பகடையாடி ஜெயிப்பது எளிதானதில்லை. அதற்காக இயலாததுமில்லை. வாழ்க்கை நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது, உருமாற்றியிருக்கிறது. துரோகம் எனக்கு மட்டுமானதில்லை என்பது தான் உண்மை. நம்பிக்கையே மட்டுமே எனக்கு மட்டுமானது என்பதில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை உண்டு.
- பிரபு 

No comments: