நாமளும் கோடீஸ்வரர் ஆகலாம் வாங்க!

July 05 2016
சமீபகாலமாக ஆன்லைன் தொழில், மல்டி லெவல் மார்கெட்டிங், என்று பல நூதன முறைகளில் ஏமாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது! எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை! சென்ற மாதம் திருப்பூரில் நண்பர் ஸ்ரீயுடன் பேசி கொண்டிருக்கும் போது சொன்னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவார்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்டதட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!

சிலர் அம்மாதிரி சம்பாதித்திருக்கிறார்கள் என்றான்! ஆரம்பத்தில் பணம் கொடுப்பார்கள் மொத்தமாக ஒரு பெரிய தொகையை லவட்டி கொண்டு ஓடுவார்கள் என்றேன்! முதலில் அந்த அளவு வருமானத்திற்கு சாத்தியமா என்று யோசிக்கனும்! அப்படி சாத்தியம் என்றால் அது கள்ளநோட்டாக தான் இருக்கும்! பேராசை பட்டு பணத்தை கொடுத்துட்டு ”எதோ ஒரு” கனவு கண்டா வெளியே சொல்லமுடியாதுன்னு சொல்வாங்கள்ள அந்த மாதிரி இருக்கக்கூடாது!

நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!
இந்த idea எனக்கே இப்பொழதுதான் தோன்றியது. அதுவும் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சி பார்க்கும் பொழுதுதான் தோன்றியது! 

உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்
ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் முயற்ச்சி செய்வேன்!

நேர்மையான வழியில் சம்பாரித்தால் நாட்டிற்கும் நல்லது, வீட்டிற்கும் நல்லது!
- பிரபு 

No comments: