பொஸஸிவ்னஸ்

July 07 2016
பொஸஸிவ்னஸ் என்பது உறவிகளுக்கிடையேயான மிகக் கடும் பிரச்சினை. இந்த மாதிரி பொசஸிவ்னஸில் புலம்பும் எத்தனையோ பேரை லெபட் அன்ட் ரைட் வாங்கி இருக்கேன்.நான் எப்போவுமே என் நட்புகளிடம் பொஸஸிவ்னஸ் கொள்வதில்லை அப்படின்னு ஒரு நெனப்புலயே சுத்திட்டு இருந்தேன்.ஆனால் அண்மையில் வெளியூரில் வேலை செய்யும் நன்பன்  ஒருத்தன்  ஊருக்கு வருவதை என்னிடம் சொல்லாமல் வேறொருவர் சொன்னது, அவர் மூலமாகத் தெரியவந்தபின் அவனை நான் திட்டிய திட்டு ,அம்மாடி.. எனக்கே கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கு. அதுக்கு அவன் கேட்டான். "டேய் இப்ப உனக்கு என்ன பிரச்சினை. நான் உன்கிட்ட சொல்லாம வந்ததா இல்ல அவர்கிட்ட சொன்னதா" என்று. சர்வ நிச்சயமாய் பதில் தெரியவில்லை.....என்னிடமும்
பொஸஸிவ்னஸ் எட்டிப்பாக்குதோ?!!

No comments: