நா வாலியா இல்ல வாலிபாலா?!

July 18 2013

உக்கு விக்கிறவன ஊகுவிச்ச
உக்கு விக்கிறவன் கூட தேக்கு விற்பான்! - வாலி

நன்றி -கடுகளவும் இல்லாத கலையுலகில் எம்.எஸ்.வி சந்திக்கும்முன் திங்கறதுக்கு சோறு இல்லை. சந்தித்த பின் சோறு திங்க நேரமில்லை... என்று சொல்லி  எம்.எஸ்.வி காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தார் வாலி.

அவரின்  மிக சிறந்த பாடல்களை சொல்ல ஆரம்பித்தால் சொல்லி கொண்டே போகலாம் ... இப்பொழுது என்னுள் தோன்றும் ஒரு சில முத்துக்கள்...

 பசும் தங்கம் , புது வெள்ளி , மாணிக்கம் , மணி வைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் - அறிவூட்டும் தந்தை நல வழி காட்டும் தலைவன்.

 இது சொர்கமா ? நரகமா ? சொல்லடி உள்ளபடி ...நான் வாழ்வதும் விடை சொல்லி போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி.

தவறு என்பது தவறி செய்வது - தப்பு என்பது தெரிந்து செய்வது ...தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் - தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.

பணம் காச கண்டுபுட்டா புலி கூட புல்ல தின்னும் - கலி காலம் ஆச்சுதடி கண்மணி ..வேப்பில்லை கருவேப்பில்லை அது யாரு நான்தானோ!.

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வெச்ச குப்பையாக வந்த உடம்பு - அதில் புத்தன் என்னும் , சித்தன் என்னும் , பித்தன் என்னும் ஆனதென்ன சக்கையாக போகும் கரும்பு.

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை , தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை ..மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் , தவறாமல் அங்கே தெய்வம் வந்து சேரும்.

பொய்யான சில பேர்க்கு புது நாகரிகம் ...புரியாத பல பேர்க்கு இது நாகரிகம் ..முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம் ? முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்.

இன்று மாலை 5 மணி அளவில் சென்னையில் அவர் உயிர் பிரிந்தது ..அது தொடங்கி மேகங்களும் சென்னையில் விடாமல் அஞ்சலி செலுத்தி கொண்டே இருக்கின்றன..

வாழ்க இந்த வாலிபனின் புகழ்!

1 comment:

Anonymous said...

This is very interesting, You are a very skilled blogger. I have joined your rss feed and
look forward to seeking more of your magnificent post.

Also, I have shared your site in my social networks!


Also visit my web blog: effects vicodin