துர்காவும் அக்காவும்

May 17 2016

இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் என் அம்மாவிடம் என் அக்காவை பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் பிறந்து சில மணி நேரத்திலேயே இறந்து விட்டால்! அவள் இருந்திருந்தால் எந்த மாதிரியான ஒரு அக்காவாக இருந்திருப்பாள் என்ற யோசனை தூங்கவிடாமல் வந்துகொண்டே இருந்தது. கண்டிப்பாக எனது குறும்பிலும் பாதியாவது அவளிடம் இருக்கும். நிச்சயமாக பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் துர்கா மாதிரித்தான் இருந்திருப்பாள்! அவளுக்கும் நான் அப்புவை போல் ஒரு தம்பியாக இருந்திருப்பேனோ என்னவோ!

 அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். முதன்முதலில் சென்னையில் என் பெரியம்மா வீட்டில் தான் பதேர் பாஞ்சாலி பார்த்தேன். படம் பார்க்க துவங்கிய சில நிமிசங்களிலே துர்காவிடம் என் மனதை பறி கொடுத்துவிட்டேன். துர்காவின் ஒவ்வொரு செயலும் என்னை அவளோடு மிகவும் நெருக்கமாக செய்தது.
 
துர்கா கொய்யாபழம் திருடுகிறாள். துர்கா அம்மாவிடம் திட்டுவாங்குகிறாள். துர்கா தம்பிக்கு அலங்காரம் செய்துவிடுகிறாள். ரயிலை காட்டுவதற்காக அழைத்துக் கொண்டு ஒடுகிறாள், பாட்டியோடு ஸ்நேகம் கொள்கிறாள். துர்கா பெரிய மனுஷியை போல புடவை கட்டியிருக்கிறாள்.  துர்காவின் பெரிய கண்கள், அடர்ந்த கூந்தல், முகச்சுழிப்பு, கள்ளசிரிப்பு என ஒவ்வொன்றாக என்னுள் வேர் பதித்து கொண்டேயிருந்தது.

துர்காவிற்கு உடல் நலமற்று போகிறது. அவள் இறந்து போய்விடுகிறாள். துர்கா இனி இல்லை என்று வீடே அவளின் வெறுமையை உணர்கிறது. அந்த நிமிசத்தோடு படத்திற்குள் முழ்கியிருந்த எனக்கு மூச்சடைப்பு ஏற்பட்டது போன்று படத்தை விட்டு கண்களை வேறு பக்கம் திருப்பத் துவங்கினேன். படம் பார்க்கப் பிடிக்கவில்லை. ஒரு கண்ணாடிக் கோப்பையை கைதவற விட்டது போன்று உள்ளுக்குள் நடுங்கி கொண்டேயிருந்தது.

துர்கா திருடி ஒளித்த வைத்த பொருட்களை அப்பு எடுத்து வெளியே எறியும் போது அத்தனையும் ஒடிப் போய் பொறுக்கி கொண்டுவிட வேண்டும் போலிருந்தது. ஈரக்களிமண் காலில் ஒட்டிக் கொள்வது போல மனதில் துர்கா அப்பிக் கொண்டு விட்டாள். ஆனாலும் அவள் உருவாக்கிய துக்கம் வடியவேயில்லை. இரண்டு நாட்களுக்கு மேல் சென்னையில் இருக்க முடியவில்லை. ஊருக்கு புறப்பட்டுவிட்டேன். ஆனால் துர்காவை பற்றிய நினைவுகள் மட்டும் இன்றும் மனதில் அழியாமல் அப்படியே இருக்கின்றன

துர்கா உயிரோடிருந்தால் என்னவாகியிருக்கும். அவர்கள் அந்த ஊரிலிருந்து வெளியேறி போயிருக்கமாட்டார்கள். அதைவிடவும் அப்புவின் உலகம் வேறுவிதமாக ஆகியிருக்கும். ஆனால் துர்கா படித்திருக்க மாட்டாள். துர்கா யாரையோ திருமணம் செய்து கொண்டு ஒரு எளிய வாழ்க்கையை வாழ போயிருப்பாள். ஆனாலும் துர்காவின் பாசம் அப்படியே இருந்திருக்கும். அப்புவிற்கு வாழ்வின் மீதுள்ள பிடிப்பாக இருந்திருப்பாள். துர்காவும் அப்புவிற்கும் உள்ள வெளிப்படுத்தபட முடியாத அன்பு இன்னொரு தளத்தில் அக்கதையை கொண்டு போயிருக்கும்

துர்கா காசியை பார்த்திருந்தால் மிகுந்த சந்தோஷம் கொண்டிருப்பாள். அந்த படித்துறைகளில் அவளது பாதங்கள் ஒடி களிப்படைந்திருக்கும். படித்துறை புறாக்களுக்கு தீனி போட்டிருப்பாள். துர்கா கல்கத்தாவில் ரயில் நிலையத்தை ஒட்டிய அப்புவின் அறையை கண்டிருந்தால் பால்யத்தின் காட்சியை நினைவு கூர்ந்திருப்பாள். வேதனை மிக்க தங்களது கடந்த காலத்தினை நினைத்து தன்னை மீறி அழுதிருப்பாள்.

படத்தில் கதாபாத்திரங்களை விடவும் அந்த கிராமமும் அதன் இரவு பகல்களுமே என்னை வசீகரித்தன. சத்யஜித்ரே உருவாக்கிய துர்கா ஏன் எனக்கு இத்தனை நெருக்கமாக இருக்கிறாள் என்று என்னை நானே பலமுறை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறேன். அவள் மீதான எனது விருப்பத்திற்கான காரணங்களில் சில வெளிப்படையாகவும் சில நிழல்மறைவிலும் இருக்கின்றன. அவளது சிறப்பே அவள் நம்மில் சிலரை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதே. பால்யத்தின் மாறாத கள்ளத்தை அவள் சிரிப்பு வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. துர்கா யாவர் வீட்டிலும் கரைந்து போயிருக்கிறாள்.


துர்கா ஏன் எனது அக்காவின் சாயலில் இருப்பதாக எனக்கு தோன்றியது? இன்னொரு பக்கம் துர்காவை போல தம்பிகளை நேசிக்கும் அக்காக்கள் பலரையும் எனது பால்யம் முழுவதும் பார்த்திருக்கிறேன். அக்கா இல்லாமல் இருக்கிறோமே என்று சிறுவயதில் கவலைபட்டு அழுதிருக்கிறேன். அதுவும் கூட காரணமாக இருந்திருக்க கூடும்

இவையாவையும் விட ஊரை விட்டு வெளியேறி சென்ற குடும்பங்கள் யாவின் பின்புலத்திலும் ஒரு துர்மரணம் இருந்திருக்கிறது என்பதை நிதர்சனமாக கண்டதும் காரணமாக இருந்திருக்கலாம்

என் அக்காவும் இப்படி கண்ணுக்கு தெரியாத ஏதோ காரணங்களை நினைவுபடுத்துவதோடு மட்டுமல்லாது சில நிமிடமே வாழ்ந்தாலும் மின்மினிப்பு காட்டிச் செல்லும் மின்மினிப்பூச்சி போல வாழ்வின் வசீகரத்தை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்.


நீங்கள் பதேர் பாஞ்சாலி பார்த்திருக்கிறீர்களா என தெரியாது. ஆனால் ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்கு ஒரேயொரு காரணமிருக்கிறது. அதில் உங்கள் பால்யமும் கரைந்து கிடக்கிறது. துர்காவை போன்ற சிறுமி உங்களுக்கு சகோதரியாக இருந்திருக்க கூடும்.
- பிரபு 

The Sexy Pot Belly

May 05 2016

I recently read a Tamil article which detailed the different advantages of having a pot belly. 

Inspired from that article, I am writing this article which lists out the various uses of having a pot belly.

I am adding my own thoughts too with my own nutcrackers.

The various advantages of Pot Belly
1) When you fall face down on the ground, the pot belly will protect your face from hitting the ground. If there is no pot belly there is a high chance of you breaking your nose, hurting your eyes, breaking your teeth and having a bad head injury which in turn will result in brain damage. So pot belly is actually a life saving attachment for your body.

2) It is one of the most wonderful time-pass object in the world. When you are bored and when you have nothing to do, you can scratch your pot belly. You can sit on a chair and scratch your belly. You can also stand and scratch your belly. Some times, you can even lie on your back and slowly scratch your belly. It give an awesome feeling to you. The bigger the belly, the greater the feeling.
3) It is also a wonderful play station for children. Children can use the pot belly as punching bags. If the person with the pot belly lies on his back, the children can play sliding down his pot belly. This increases the blood flow of little children and also their appetite. It also increases the brain power of the children and they become better citizens of the country.

4) When you don't have a table to keep your laptop, you can use your own belly to keep the laptop. Also you can write by keeping a notebook on your belly. So it actually acts as a table too.

5) If you have a fluffy pot belly, many people can use your belly as a pillow while sleeping. When you are touring with your family and if you had forgotten to take a pillow, you can use your belly as a pillow for your family.

6) When you walk in the sun, your belly will act as a shield to your feet, and toes. It blocks sun rays from reaching your toes. So it helps you from not dehydration.

7) If you are in a music concert and if the musician who plays the ghatam had forgotten to bring the ghatam, you can ask him to use your tummy. Your tummy becomes a music instrument too. Make sure that you don't suffer from gastric problem when he plays your tummy.

8) If you have a big tummy, your respect increases. Examples are Policemen, Politicians.

9) Pregnant women carry the baby only for nine months. But when you have a pot belly, you carry it for life. People with pot belly are actually people who sacrifice their life for themselves. I salute them.

You know why I use sun glasses?

May 04 2016
I was waiting for an opportunity to post this picture of mine on my blog. Finally I got a suitable topic and I grabbed the opportunity immediately. This picture was taken in my home. This picture was clicked by my Wify. It was the one which is close to my heart. It was my first click after my marriage. Now let me come to the topic. Sun glasses have many uses. This post will list down the different uses of sun glasses

Sunglasses can cool the eyes and protect them from sun rays.
Sunglasses can also act as a hair band. My sun glasses are mostly oily as I keep them on my hair all the time. The crickets started this trend and many people like me follow it
Sunglasses can be stylishly held in one hand and rotated. This is done by some to gain attention.
Sunglasses can be worn on t shirts, shirt pockets. This is also for style quotient
The sunglasses can be worn to view color pictures as they give the photographs an instagram effect.
If you are bald headed, wearing a sun glass might make you a Kalaignar look-alike.
Sunglasses are like Facebook. You can stare at anyone without getting caught.
Sunglasses take away your shyness by a larger extent.
Some people are recognized by others only when they wear their sunglasses . Examples : - Director Balachander, Powerstar, Carrie Anne Moss and ofcourse me too. You might also be someone like that. Make an impact with sunglasses.
Giant sunglasses make unattractive girls look cute. Now I have incurred the wrath of the ladies with this point. So it is time for me to end this post

செம்மீன்

May 03 2016
நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்த போது கேரளாவின் புகழ்பெற்ற நடிகர் மதுவைச் சந்தித்தேன், தனியே அமர்ந்து வார இதழ் ஒன்றினை வாசித்துக் கொண்டிருந்தார், அவரிடம் என்னை நான் உங்கள் ரசிகன் என்று அறிமுகம் செய்து கொண்டு பேசியபோது புன்சிரிப்புடன் தமிழ் மக்கள் எனது படங்களை நேசிக்கிறார்களா எனக்கேட்டார்,  செம்மீனைப் பிடிக்கும் என்று சொன்னேன், செம்மீன் ஒரு நல்ல படம் என்று சொல்லிவிட்டு பெருமூச்சிட்டுக் கொண்டார்,

பிறகு வேடிக்கையான குரலில் சொன்னார், அது கருத்தம்மாவின் படம், ஷீலாவைத் தமிழ் மக்களுக்கும் ரொம்ப பிடித்திருந்தது, அவள் தான் படத்தின் ஆதார பலம், அப்படியொரு கதாபாத்திரம் சினிமாவில் தோன்றுவது அபூர்வம் என்றார்,பரிகுட்டியாக அவர் சிறப்பாக நடித்துள்ளதை பற்றி சொன்னேன், அதுவும் குறிப்பாக ஒரேயொரு தலைமுடி முன்னால் விழும் அவரது தோற்றம் வசீகரமானது என்றேன், அப்படியா, என்றபடியே மறுபடியும் புன்னகை செய்தார்.

பிறகு, மெல்லிய குரலில், அந்தப் படத்திற்கான எனது ஸ்கிரின் டெஸ்ட் சென்னையில் தான் எடுக்கபட்டது என்றபடியே அவர் தனது  கண்களை மூடிக் கொண்டார், விமானம் ஏறும் வரை அதன் பிறகு மது என்னோடு பேசவில்லை,
செம்மீன் மலையாள சினிமாவில் மறக்கமுடியாத படம்,  தகழி சிவசங்கரன் பிள்ளையின் நாவலை அற்புதமாக படமாக்கியிருப்பார் ராமு கரியாத், மார்க்ஸ் பட்லேயின் கேமிரா கடற்புர வாழ்வை, கடலைப் படமாக்கிய விதம் ஒப்பற்றது.

மதுவைப் பலரும் கண்டுகொண்டு சிறு புன்ன்கையுடன் கடந்து போய்க் கொண்டிருந்தார், விமானத்தில் அவர் தனக்கான இருக்கையை தேடிப்போய் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி ஒய்வு கொள்ளத் துவங்கினார், விமானம் தரையிறங்கும் போது என்னை பார்த்து புன்னகையுடன் தலையசைத்தபடியே இறங்கிச் செல்ல ஆரம்பித்தார்

அவரை பார்த்த நிமிசத்தில் இருந்து மனம் முழுவதும் செம்மீன் படத்தின் மீதே நிலைத்திருந்தது, இன்று கோவை வந்து சேர்ந்தவுடன் செம்மீனை மறுபடி பார்க்க வேண்டும் என்று தேடத்துவங்கினேன், படம் கிடைக்கவில்லை. 

செம்மீன் நாவலை வாசிக்கத் துவங்கினேன். செம்மீன் நாவலை சுந்தர ராமசாமி மொழியாக்கம் செய்திருக்கிறார், அற்புதமான மொழிபெயர்ப்பு அது, கடற்புரத்தின் மணம் நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் வீசிக் கொண்டிருக்கிறது.

இப்போது நாவலை வாசித்த போதும் பரிக்குட்டியை எனக்கு பிடித்திருந்தது, நிராசையின் நாயகன் அவன், நம் எல்லோருக்குள்ளும் நிராசை கொண்ட காதலன் ஒருவன் இருக்கிறான்,  அவனின் அடையாளம் தான் பரிக்குட்டி
நேற்றைக்கு தான் எழுதப்பட்டதோ எனும்படி அவ்வளவு புதியதாக உள்ளது செம்மீன், தகழி இந்த நாவலை மூன்று வாரத்தில் எழுதியிருக்கிறார் என்கிறார்கள், 30 மொழிகளில் செம்மீன் நாவல் வெளியாகியிருக்கிறது. 

இப்படத்தின் பாடல்கள், வசனம் அடங்கிய இசைத்தட்டு ஒன்றினை முன்பு வைத்திருந்தேன், மானச மைனே வரோ எனக்கு விருப்பமான பாடல்,செம்மீன் இந்திய சினிமாவில் மறக்கமுடியாத படம், ஒரு நாவல் படமாக்கபட்டு மிகப்பெரிய புகழைப்பெற்றது செம்மீனில் தான் நடந்தேறியது.
- பிரபு 

நீ என் பொறுப்பு

May 01 2016
அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது , நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள், மனது ஒரு வித பயத்துடனே இருந்தது, ஆம்... அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள், அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம், இதயம் ஒரு நொடி நிற்க....

திரும்பி பார்த்தால் தன்னுடைய மேனேஜர், “ ஹேய் என்ன இங்க நிற்கிற, பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் நீ என்னுடன் பணி புரியும் பெண், நீ என் பொறுப்பு என்று சொல்லி அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார், ஆட்டோ நகர்ந்தது ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது ஆட்டோக்காரர் கேட்டார் ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க என்று , ஒரு பதட்டத்தோடு ஆம் என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது....

தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும் ஆட்டோவை நிறுத்த சொன்னாள், ஆட்டோ காரர் உடனே கொஞ்சம் இரும்மா பயப்படாதே அந்த தெரு முனையில் விடுறேன், என் ஆட்டோவில் வருகின்றாய் நீ என் பொறுப்பு என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார். இரண்டு அடி கூட நடக்கவில்லை அதற்குள் ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார், இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக....

அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு இங்க வாம்மா நீ இவரோட பொண்ணு தான?, வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன் என்றார், கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை , ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது இல்லையா, இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது தானே....

நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு என ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும், சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும்... 
- பிரபு