வருந்தாதே பிரபு !

வருந்தாதே பிரபு
வாய்ப்பிழந்து போகவில்லை 

காலத்தின் ஒரு பகுதி
நீ கடந்திருப்பது

இன்று தெளிந்தாலும் 
நீ முழுமை நோக்கி
முதலடி வைக்கலாம் 

ஒரு வகையில் நீ புத்திசாலி
சந்தையில் சம்பாதித்தவர்க்கிடையில்
ஒரு சந்தையை சம்பாதித்தவன்

ஓரிடமிராதே
ஓடு...ஓ...டு
ஒரு நாள் குகைப்பிளவு
ஒரு நாள் மரக்கிளை 
ஒரு நாள் தின்னையில்
அடுத்தொரு நாள் மாளிகையில் 

அன்று உணர்வாய்
நீயழிந்தொளிய
நீயல்லாத நீதான் 
நீ என்று!

- பிரபு

No comments: