கண்ணீரில்லாமல்!

15-01-2016

பல நாட்கள் ஆகிறது நான் blog பக்கம் வந்து வேலை பலு மற்றும் குடும்ப பொறுப்புகள் வேறு. சரி இனி வாரம் ஒரு post ஆவது முயற்சி செய்கிறேன். 
sujatha
ஏழு வருடங்களுக்குப் பிறகும் வாரம் ஒருமுறையாவது ஞாபகத்துக்கு வந்து விடுவார். பதான் கோட்டில் தீவிரவாதிகள்  எப்படி புகுந்தார்கள் என்றும், ஆகாய விமானங்கள் தடயமின்றி காணாமல் போனாலோ, இந்தியாவை சுத்தம் செய்கிறேன் என்று யாராவது சவடால் விட்டாலோ, சென்னையில் ஸ்டிக்கர் ஓட்டினாலோ ‘சே, வாத்தியார் என்ன சொல்லியிருப்பார்’ என்றே இன்னமும் தோன்றுவது அதிசயமல்ல.

அவரெழுதிய எந்த ஒரு புத்தகத்தை இப்போது படிக்கும் போதும், ‘இவருக்கு என்ன தான் புரியாமல் போயிருக்கும்’ என்று தோன்றுவதும் அதிசயமல்ல. முன்னமே சொன்னது போல், எத்தனை பெரிய ரிசஷனயும் மறக்கடிக்கும் எழுத்துக்களை தந்ததற்கு நன்றிகள் பல, வாத்யாரே !!

பி.கு – கண்ணீரில்லாமல் – சுஜாதா உயிர்மையில் 2004-05களில் எழுதிய கட்டுரைத்தொகுப்பு. அதில் சங்ககால காப்பிய சித்தர்கள் முதல் க்வாண்டம் தியரி வரை கர்நாடக சங்கீதம் முதல்  கிரிக்கெட் வரை வழக்கமான சகலமும் எழுதி இருப்பார் முடிந்தால் வாங்கி  படியுங்கள் அனைவர்க்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவர்க்கும் சௌக்கியம்.

No comments: