காதலித்து கெட்டு போ!

February 26 2011

அதிகம் பேசு

ஆதி ஆப்பிள் தேடு

மூளை கழற்றி வை 

முட்டாளை பிறபெடு

கடிகாரம் இருந்தும் மணி கேள்

காத்திருந்து கான்

தம்பிகள் தேடி போ

தூதுக்கு தயார் செய் 

தத்துவங்கள் கேட்காதே 

நாய் குட்டி கொஞ்சு 

நண்பன் இருந்தாலும் தனியாய் செல் 

கடிதம் எழுத கற்றுகொள்

விதவிதமாய் பொய் சொல் 

பின் தொடர்ந்து பல் இழி 

பொறுக்கி என்பாள் பொறு 

தெரிந்தும் தெரியாதது போல் நடி 

விழி ஆற்றில் விழு 

பூப்பறித்து கொடு 

மேகமென கலை 

மோகம் வளர்த்து மித 

மதி கெட்டு மாய்

கவிதைகள் கிறுக்கு 

கால்கொலுசில் இசை உணர் 

தாடி வளர்த்து கொள்

எடை குறைத்து சிதை

உளறல் வரும்வரை குடி 

ஊர் எதிர்த்தால் உதை

ஆராய்ந்து அழிந்து போ 

மெல்ல செத்து மீண்டு வா

திகட்ட திகட்ட காதலி 

காதலித்து கெட்டு போ!  

- பிரபு 

4 comments:

Arthi said...

கவித கவித!

Shreeja said...

macha simply superb da! Its truly from ur heart da! I can feel it!

Adarsh said...

hey,u've got a very nice thought da!.:)

Priya said...

தத்துவங்கள் கேட்காதே
நாய் குட்டி கொஞ்சு
நண்பன் இருந்தாலும் தனியாய் செல்