கலைவாணர் நகைச்சுவை

January 3 2010

பின்னாளில் சினிமாவில் கொஞ்சம் சம்பாதித்திருந்த கலைவாணரிடம் ஒரு பத்திரிகையாளர் இப்படிக் கேட்டாராம்: “”நீங்கள் இப்போது ஒரு பணக்காரர்தானே?”
கலைவாணரின் பதில்: “”ஆமாம். ஆனால் மற்ற பணக்காரர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நான் சம்பாதிப்பது இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்காகத்தான்!”
——————————————————————————————
திரைப்படக்காட்சி
சிவாஜி -வரதட்சணைப் பிரச்சனையால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு விரட்டியிருப்பார்கள். கலைவாணர் மாப்பிள்ளை பையனின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார்.
மாப்பிள்ளைப் பையனுக்கு மறைமுகமாக புத்தி சொல்ல நினைப்பார்கையில் ஒரு புறாவுடன் இன்னொரு வேலைக்காரனைத் திட்டிக் கொண்டிருப்பார். கதாநாயகனிடம் நியாயம் கேட்பார்.’பாருங்கஒருத்தர் இவனுக்கு இந்த அழகான மணிப்புறாவை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரிடம் நன்றியோடு இருப்பதைவிட்டு அதை வளர்க்கவும் காசு கேட்கிறான்என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
இந்த இடத்தில் புறாவையும் புதுப்பெண்ணையும் ஒப்பிட்டோ அல்லது வேறு மாதிரி கதாநாயகனுக்கு அறிவுரை சொல்றது மாதிரி வசனங்கள் ஏதுமிருக்காதுமறைமுகமான அறிவுரை
———————————————————

No comments: